About Thiruganasampandhar

 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

            திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அல்லது 
சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் 
மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் 
வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்.

முதல் ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், 
திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் 
ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். 
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதல் திருமுறை பாடியுள்ளார்.



கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார்.
 இவரது தந்தையார் சிவபாதவிருதயர். 
தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, 
தந்தையாருடன் கோயிலுக்குச்
 சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், 
சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, 
அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், 
சிவபெருமானுடன் இவர் முன் காட்சி
 கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்து கோயிலிலுள்ள 
இறைவனைச் சுட்டிக்காட்டி தோடுடைய செவியன்... 
என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடினார் என்றும் 
சொல்லப்படுகிறது.ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி 
பெயர் சொக்கியார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கோயில்:

 திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் 
பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 
இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு சிறப்பாகக் கட்டப்பட்டது. 
இக்கோயிலில் சம்பந்தரே, மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார். 
வருடாவருடம் வைகாசி மாதத்தில், இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக 
திருவிழா நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, வீதிகளில் உலாவருவார். 
மேலும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் இவ்வூர் தேவார அடியார் குழுவால் 
தேவாரப் பாடல்களும், பதிகங்களும் பாடப்பெற்று, சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
இத்தலம், தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், 
புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
தஞ்சையிலிருந்து 35 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது இவ்வூர். 
முற்றிலும் விவசாயத்தையே தொழிலாக கொண்ட உரந்தை வளநாட்டின் ஒரு பகுதியாகும்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் 
திருக்கோவில் ஒன்று உள்ளது.

கருத்துகள்

கருத்துரையிடுக

Most Viewed

kannadasan -Sendhamizh Thenmozhiyaal Lyrics in English

Jagame Thandhiram - Bujji song lyric in English and Tamil

Thevaram lyrics in tamil/முதல் திருமுறை